16. முருக நாயனார்

அமைவிடம் : temple icon.thillaivaz anthanar
வரிசை எண் : 16
இறைவன்: அக்னிபுரீஸ்வரர்
இறைவி : கருந்தார்குழலி
தலமரம் : புன்னை
தீர்த்தம் : அக்னி தீர்த்தம்
குலம் : அந்தணர்
அவதாரத் தலம் : திருப்புகலூர்
முக்தி தலம் : ஆச்சாள்புரம்
செய்த தொண்டு : அடியார் வழிபாடு
குருபூசை நாள் (முக்தி பெற்ற மாதம்/நட்சத்திரம்) : வைகாசி - மூலம்
வரலாறு : சோழ நாட்டில் திருப்புகலூர் என்னும் பதியில் அவதாரம் செய்தார். வேதங்களை உணர்ந்தவர். நாள்தோறும் மலர்களைப் பறித்து திருப்புகலூர் பெருமானுக்குச் சூட்டி மகிழ்வார். இறைவனுக்கு மலர் தொண்டு புரிந்து அவன் திருவடி அடைந்தார்.
முகவரி : அருள்மிகு.அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்புகலூர், (திருக்கண்ணபுரம் வழி) – 609704 நாகை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 12.00 ; மாலை 04.00 – 08.00
தொடர்புக்கு : தொலைபேசி : 04366-292300

இருப்பிட வரைபடம்


புலரும் பொழுதின் முன் எழுந்து புனித நீரில் மூழ்கிப் போய் 
மலரும் செவ்வித் தம் பெருமான் முடிமேல் வான் நீர் ஆறுமதி 
உலவும் மருங்கு முருகு உயிர்க்க நகைக்கும் பதத்தின் உடன் பறித்த 
அலகில் மலர்கள் வெவ் வேறு திருப்பூம் கூடைகளில் அமைப்பார்

- பெ.பு. 1028
பாடல் கேளுங்கள்
 புலரும் பொழுதின்


Zoomable Image

நாயன்மார்கள் தலவரிசை தரிசிக்க    பெரிய வரைபடத்தில் காண்க